தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள ஒரு தியேட்டர் வாயிலில் கடந்த 13-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், ராஜீவ் நகரைச் சேர்ந்த லால்டன் மகன் மைக்கேல் அந்தோணி (20), தனராஜ் மகன் அந்தோணிராஜ் (20), சந்தனகுமார் மகன் மருதநாயகம் (19), திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுகுமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.