Regional02

மழை வேண்டி சிறப்பு பூஜை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுன் குறுக்குத்துறை துர்கா ஷீரடி சாய்பாபா கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. துர்கா ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த பூஜையில் மழை வேண்டி ஏராளமானோர் தியானம் செய்தனர். 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பாபாவின் சாய் சரித்திரம் படிக்கப்பட்டது. பஜனை குழுவினர் சாய்பாபா பஜனை செய்தனர். இரவில் சாய்பாபாவுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஏற்பாடுகளை எஸ். ஆறுமுகம் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT