Regional02

ரயில்வே ஊழியர் வீட்டில் ரூ.18 லட்சம் நகை திருட்டு :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகேயுள்ள சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் துரையரசன். ரயில்வே ஊழியர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துரையரசன், அவரது மனைவி, மகன் ஆகியோர் ஓர் அறையில் உறங்கியுள்ளனர். நேற்று காலையில் எழுந்துபார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, மற்றொரு அறையிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT