கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட, கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
Regional02

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் - தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 450 படுக்கை களுக்கு தடையின்றி கிடைக்க, புதியதாக 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது, கரோனா சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் கூறியதாவது:

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பொது இடங்களுக்கு தொடர்ந்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசின் விதி முறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மாவட்ட தலைமை மருத்துவ மனையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள 512 படுக்கைகளில் 450 படுக்கைகளுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி நேரடியாக ஆக்ஸிஜன் செலுத்தும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்க் (liquid oxygen tank) அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனி ருந்தனர்.

SCROLL FOR NEXT