நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். (வலது) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி. படங்கள்: மு. லெட்சுமி அருண் 
Regional01

கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு :

செய்திப்பிரிவு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருநெல்வேலி சந்திப்பு சாலை குமாரசுவாமி கோயில், பாளையங்கோட்டை சிவன் கோயில், தெற்கு பஜார் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறுக்குத்துறை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயருக்கு பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தெற்குபஜார் முத்தாரம்மன் கோயிலிலும் அம்மனுக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தென்காசி

கன்னியாகுமரி

அதேநேரம் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்றன. மேலும் காய்கனிகள் அலங்கரித்து வைத்து விஷூ கனிகாணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 7 மணிக்கு பின்னர் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவை சார்பில் நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவுக்கு வள்ளலார் பேரவை மாவட்ட தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எழில் வேலவன் பங்கேற்று அருள்ஜோதியை ஏற்றி வைத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT