திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. லே செயலராக ஜெயசிங் வெற்றிபெற்றார்.
இத்தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்பட்டது. 4-ம் கட்டமாக லே செயலர், உதவி தலைவர், குருத்துவ செயலர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. லே செயலர் பொறுப்புக்கு முன்னாள் செயலர் வேதநாயகம், தொழிலதிபர் ஜெயசிங் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் நடை பெற்றது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார், ஜோதிமணி, ரத்தினராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இத்தேர்தல் நடத்தப்பட்டது. திருமண்டலத் திலுள்ள திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 120 சேகரங் களில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் குருவானவர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதில், லே செயலராக ஜெயசிங் வெற்றிபெற்றார். அவரது அணியைச் சேர்ந்த சுவாமிதாஸ் உதவி தலைவராகவும், பாஸ்கர் கனகராஜ் குருத்துவ செயலராகவும் வெற்றிபெற்றனர். பொருளாளராக ஏடிஜேசி மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.