அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு மரியாதை செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: மு. லெட்சுமி அருண் 
Regional02

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவிப்பு :

செய்திப்பிரிவு

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பெருமாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, ஈஸ்வரமூர்த்தி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி அருகே நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுகசெயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் டேனி அருள் சிங், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, தமிழர் விடுதலைக் களம் மாநில துணைத் தலைவர் சாமி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

திருநெல்வேலி

கன்னியாகுமரி

தலித் மக்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் படத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தக்கலை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த முதல் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. நல உதவிகள் வழங்கப் பட்டன.

SCROLL FOR NEXT