தூத்துக்குடியில் தீ தொண்டு நாளை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
Regional03

தீயணைப்பு நிலையங்களில் தீ தொண்டு நாள் :

செய்திப்பிரிவு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்புபடையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீ தொண்டு நாள்கடைபிடிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறை சார்பில், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உயிர்நீத்தோர் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தலைமை வகித்து, அஞ்சலி செலுத்தினார். அவர் கூறும்போது, ``வரும் 20-ம் தேதி வரை ஒருவாரகாலம் அனுசரிக்கப்பட உள்ள தீதொண்டு வாரத்தில், தீ தடுப்புகுறித்த பிரச்சாரங்கள் மற்றும் கரோனா பெருந்தொற்றினை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த பிரச்சாரங்கள் செய்யப்பட உள்ளன.மாவட்ட உதவி அலுவலர் த.முத்துபாண்டியன், நிலைய அலுவலர்கள் ஜோ.சகாயராஜ், பெ.முனியசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

நாகர்கோவில்

SCROLL FOR NEXT