Regional02

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் - ரம்ஜான் நோன்பு தொடங்கிய கைதிகள் :

செய்திப்பிரிவு

வேலூர் மத்திய சிறையில் 40 கைதிகள் ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கினர்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களிலும் நோன்பு இருப்பது வழக்கம். வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.

சிறை நிர்வாகம் அனுமதி

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என கடந்த வாரம் சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து. அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று முதல் 40 கைதிகள் ரம்ஜான் நோன்பை தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவும், மாலை 6 மணிக்கு மேல் உணவு வழங்கவும், சிறையில் தொழுகையில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT