திருவண்ணாமலையில் நடைபெற்ற தீத்தொண்டு நாள் நிகழ்ச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி. 
Regional02

தி.மலையில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை தீயணைப்பு நிலை வளாகத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக் கப்படுகிறது.

அதன் படி, தி.மலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் நேற்று தீத்தொண்டு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

இதில், தி.மலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி பங்கேற்று நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகன் மற்றும் தி.மலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால், தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT