சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த நாராயணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (43). இவர் சின்னக்கடை வீதியில் காய்கறிகடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முரளி கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச்சென்றார்.
இந்நிலையில், நள்ளிரவில் அவரது கடை தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் முரளிக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், கடையில் இருந்து காய்கறிகள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இதுதொடர்பாக டவுன் போலீஸார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.