சேலம் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்ற தமிழ்செல்வன் (35). இவரது மனைவி சத்யபிரியா (30). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வெள்ளிப்பட்டறையில் தமிழ்செல்வன் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை லீ பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தமிழ்செல்வன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், தமிழ்செல்வன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காவல்துறை பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய தமிழ்செல்வன் உயிரிழந்தார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.