தண்டலை கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி. 
Regional02

தண்டலை கிராமத்தில் - பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலை கிராமத்தில் பொதுநிதி திட்டத்தின் கீழ்கடந்த 2013-2014-ல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்இணைப்புடன் கூடிய குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டது.

அதனை சரிவர பராமரிக்காத தால் மின் மோட்டார்கள் மற்றும் குடிநீர் தொட்டி பழுதடைந்து கடந்த 6 வருங்களாக குடிநீர் விநியோகிக்கப்படாமல் காட்சிப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டு இந்த ஆழ்குழாய் கிணற்றை ஆழ்ப்படுத்தி, மின் மோட்டார்களை சீரமைத்து குடிநீர் தொட்டியில் நீரேற்றி தடையின்றி குடிநீர் விநியோகம் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT