ஆத்தூரில் பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள். 
Regional02

ஆத்தூர் வட்டார விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிக்க பயிற்சி :

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மணக்கடவு கிராமத்தில் வானவராயர் வேளாண் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுடன் தங்கி விளைநிலங்களுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்வதுடன் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிப்பு, செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பஞ்சகவ்யம், தசகவ்யம் ஆகியவை பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் மற்றும் மகசூலைப் பெருக்கும் என்றும் எடுத்துரைத்தனர். இவை பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

SCROLL FOR NEXT