திண்டுக்கல் நகரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களை நிறுத்தி முகக் கவசம் வழங்கி அறிவுரை கூறிய காவல் அதிகாரி. 
Regional03

திண்டுக்கல்லில் முகக்கவசம் வழங்கி மக்களிடம் போலீஸார் விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் நகரில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற பலமுறை அறிவுறுத்தியும் பொதுமக்கள், கரோனா பாதிப்பின் தாக்கத்தை உணராமல் முகக்கவசம் இன்றி செல்வது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது என அலட்சியமாக இருந்து வருகின்றனர்.இதையடுத்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி, இலவசமாக முகக்கவசம் வழங்கினர். மேலும் கரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

SCROLL FOR NEXT