ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் வேலுமணி மாதவன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தபோது உமாதேவி தூக்கிட்டு இறந்த நிலையிலும், மற்றொரு அறையில் பாலகிருஷ்ணன் கழுத்தறுத்து உயிருக்குப் போராடியதும் தெரிந்தது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரவில் உமாதேவி தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இதை அறிந்து வேதனையில் பாலகிருஷ்ணனும் தனக்குத் தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பு உறவினர்களிடமும் விசாரிக்கின்றனர்.