அணைக்கட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் மாணவர்கள். 
Regional02

விவசாயிகளுக்கு வேளாண் செயல்முறை விளக்க கண்காட்சி :

செய்திப்பிரிவு

அணைக்கட்டில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க கண்காட்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி தோட்டக் கலை கலலூரி மாணவர்கள் கோகுல், நவீன், நவநீதன், மோகன், இளவரசன், பார்த்திபன் ஆகியோர் கிராமத்தில் தங்கி பயிலும் திட்டத்தின் கீழ் ஈடுபட் டுள்ளனர். இவர்கள், கிராமங்களில் 60 நாட்கள் தங்கியிருந்து விவ சாயிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து பயிர் செய்யும் முறைகளை கேட்டறிந்து புதிய தொழில்நுட்ப முறைகளை கற்றுக்கொடுத்து வருகின்றனர். அதன்படி, அணைக்கட்டு கிராமத் தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம், ஒரே நிலத்தில் பல பயிர் சாகுபடி, இயற்கை விவசாய முறையையும் கற்றுக் கொடுத்தனர்.

மேலும்,தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பஞ்சகவ்யம், மூங்கிலியம், பூச்சி விரட்டி, பத்திலை கரைசல், பயோ என்சைம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கினர். இது தொடர்பான செய்முறை விளக்க கண்காட்சி யும் நடைபெற்றது.

SCROLL FOR NEXT