தமிழ் மொழி ஆளுமையில் சிறந்து விளங்கி, பாராட்டுப் பெற்ற மாணவிகள். 
Regional01

தமிழ் மொழி ஆளுமையில் - சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசு :

செய்திப்பிரிவு

தமிழ் மொழி ஆளுமையில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியர் ந.காமராஜ், கல்வி ஆய்வாளர் பிரபாகரன், கொடையாளர் கு.கல்யாண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கச் செயலர் பாரதி மணாளன் வரவேற்றார்.பள்ளி உதவித் தலைமையாசிரியர் க.பாஸ்கரன் தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் கல்வி அலுவலர் லூ.ஆரோக்கியசாமி வட்ட அளவில் தமிழில் ஆளுமை மிக்க சிறந்த அரசுப் பள்ளி மாணவிகள், 10 பேருக்கு தலா ரூ.1,000 ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். சங்க நிர்வாகி கதிர்வேல், முதுகலையாசிரியர் பி.கிருஷ்ணகுமார் தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பேசினர்.

SCROLL FOR NEXT