விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நாட்டுப்புற கலைஞர்கள். 
Regional02

கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவும் : நாடக கலைஞர்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் முறையீடு

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட சங்கரதாஸ் சுவாமிகள் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கத்தினர், மாவட்டத் தலைவர் பன்னீர் தலைமையில் ஆட்சியர் அண்ணாதுரையிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முதன்மையாக பாதிக்கப்பட்டது எங்களது கலைத்தொழிலாகும். கடந்த ஆண்டின் ஊரடங்கால் நாங்கள் நிலை குலைந்து விட்டோம். ஒரு ஆண்டுக்குப் பின் கட்டுப்பாடுகள் நீங்கி, மீண்டும் நிகழ்ச்சிகள் நடத்ததற்போது வாய்ப்புகள் கிடைக்கும் நேரத்தில், மீண்டும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு எங்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.இந்தக் கட்டுப்பாடு எங்கள் கலைஞர்களையும், கலைஞர்க ளின் குடும்பத்தாரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். உயிர்வாழ இயலா சூழலுக்கு தள்ளப்படும். எனவே உரிய கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்திட, அதற்கேற்ற தளர்வுகளை வழங்கி, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT