மதுரை மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகளில் மின்தடை குறித்த புகார்களை தெரிவிக்க கோ.புதூர் மின் பகிர்மான வட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் ‘கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் விநியோகத்தில் குறைபாடு இருந்தாலோ அது தொடர்பாக மின் நுகர்வோர்கள் தங்கள் வீட்டு முகவரி, மின் இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்களை 1912, 0452- 2560601, 18004251812 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் ஆப் எண் 9443111912 மூலம் தகவல் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.