அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலையைக் கண்டித்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்கத்தின் மாவட்டச் செயலர் பழனிக்குமார் தலை மை வகித்தார். இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பி.லிங்கம் தொடக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அரக்கோணம் அருகே தேர்தல் முன்பகை காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப் பினர்.