Regional03

சவுதி அரேபியாவில் கோமா நிலையில் கணவர் மீட்க கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனைவி மனு :

செய்திப்பிரிவு

இது குறித்து விஜயரேகா கூறியதாவது: எனது கணவர் வெள்ளைச்சாமி (45), கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜனவரியில் உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அன்று முதல் எனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் நானும், எனது மகன்களும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.எனது கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிப். 19-ம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆட்சியரும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

மூன்று மாதங்களாகியும் கணவரை மீட்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. எனது கணவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க அவரை மீட்டு சொந்த ஊர் கொண்டுவர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT