தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையைச் சேர்ந்த வேளாண்மை கல்லூரி மாணவிகள், பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமப்புற விவசாய பணி அனுபவத்தைப் பெற பயிற்சி பெற்று வருகின்றனர்.
பட்டுக்கோட்டை வட்டாரம் நாட்டுச்சாலை கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ராமதாஸ் என்பவரின் நிலத்தில் களைக்கொல்லி தெளிக்கும் முறையை மாணவிகளே நேரடியாக செய்துபார்த்து, தெரிந்துகொண்டனர்.
களைக்கொல்லி தெளிப்பதன் மூலம் பெருமளவில் இப்பகுதியில் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதைவிட, இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தினால், மண் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.