Regional01

இலக்கிய சொற்பொழிவு :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் உள்ளமாநில தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சாலை இளந்திரையன் இலக்கிய தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் பால் வளன்அரசு தலைமை வகித்தார். முனைவர் செ. பிரமசக்தி திருக்குறள் வாழ்த்து பாடினார். நல்லாசிரியர் க.ஞா. சாண்பீற்றர் வரவேற்றார். மாநில தமிழ்ச்சங்க கட்டிடத்தை புதுப்பித்து பொலிவுற விளங்கச்செய்த மூர்த்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் சாலை இளந்திரையன் கவிதைகள் குறித்து பாவலர் இரா.சு. முத்து உரையாற்றினார். தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சாண்சேவியர் ‘அமைச்சு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். முனைவர் வை. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரா.முருகன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT