Regional03

வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா, ஏப்ரல் 16 அன்று ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. அன்று காலை அரசின் சார்பில், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT