Regional02

40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான காவலர்கள் வாணியம்பாடி புத்துக்கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ் வழியாக வந்த இரண்டு லாரிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட் டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. ஒரு லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், ஒரு லாரியின் ஓட்டுநர் மட்டும் காவல் துறையினரிடம் சிக்கினார். இந்த 2 லாரிகளில் சுமார் 40 ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திரமாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒரு லாரி ஓட்டுநரான யோகேந்திரனை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT