Regional02

சேலத்தில் ஒரேநாளில் 128 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 100-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 74 பேர், ஓமலூரில் 7 பேர், வீரபாண்டியில் 6 பேர், தாரமங்கலம், சேலம் ஊரகம், தலைவாசல் ஆகியவற்றில் தலா 5 பேர், நங்கவள்ளியில் 4 பேர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம் ஆகியவற்றில் தலா 3 பேர், எடப்பாடி, கொளத்தூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 பேர் உள்படமொத்தம் 128 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்து நேற்று 20 பேர் வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT