விழுப்புரம் மாவட்டம் வி.ஆர்.எஸ்.பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தனி மைப் பிரிவு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே பயன்படுத் தப்பட்ட கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையங்களை சுத்தம் செய்தும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து கிருமி நாசினி தெளித்து, பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மாற்றி புதிதாக படுக்கைகள் அமைத்து, நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் அமைத்து சிறப்பு சிகிச்சை மையங்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் ஒன்றான வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மைய தனிமைப்பிரிவு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.அண்ணாதுரை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தூய்மை பணியாளர் களைக் கொண்டு நோயாளிகள் அறை, கழிவறைகள் மற்றும் தனிமைப்பிரிவை சுற்றியுள்ள பகுதி களை தூய்மைப்படுத்தி, படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித்தர சம்மந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், டிஎஸ்பி நல்லசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.