Regional03

இலவச கண் பரிசோதனை முகாம் :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, கல்லாத்துப்பட்டி ஜல்லிக்கட்டு நடத்துவோர் சங்கம் சார்பில் கல்லாத்துப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.

திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத் தலைவர் கோவிந்தசாமி, எஸ்.பி.எம்.பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஜெயராஜ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் 179 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், 44 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வட்டாரத் தலைவர் ஜஸ்டின், லயன்ஸ் மாவட்டத் தலைவர் சாமி, சங்கச் செயலாளர் ராஜ் குமார், பொருளாளர் பிரபாகரன், செபாஸ்டின், வேல்முருகன், ஜல்லிக்கட்டு நடத்துவோர் சங்கத் தலைவர் ஆபிரகாம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற் பாடுகளைச் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT