தலைவாசல் சுங்கக்சாவடி அருகே முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர். 
Regional02

பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிப்பதை தடுக்க அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தலைவாசல் வட்டாரத்தில் வருவாய்த் துறையினர் பேருந்துகளில் சோதனை நடத்தினர்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் சேலம் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைவாசல் வட்டாட்சியர் அன்புசெழியன் தலைமையில் வருவாய்த் துறையினர் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிப்பதையும், பயணிகள் யாரும் பேருந்தில் நின்று பயணிப் பதை உறுதிப்படுத்த ஓட்டுநர், நடத்துநருக்கு அறிவுறுத்தினர். மேலும், விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதேபோல, சாலைகள், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT