மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முஹம்மது(40). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பீடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது நண்பர்களுடன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது, ஆழ மான பகுதிக்குச் சென்ற ஷேக் முஹம்மது நீரில் மூழ்கியுள் ளார். இதையடுத்து, உடன் வந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். நீண்ட நேரத்துக்குப் பின் ஷேக் முஹம்மது சடலமாக மீட்கப்பட்டார்.