அதிக வாடிக்கையாளர்கள் கூட்டம் இருந்ததால், திருச்சி யைச் சேர்ந்த தனியார் நிறு வனத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வணிக வளாகங்களில் அதிக அளவில் கூட்டம் சேர்க்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று அதிக கூட்டம் காணப்பட்டது.
இதையடுத்து, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் குகன் அந்த நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித்தார்.