Regional02

போக்ஸோ சட்டத்தில் சகோதரர்கள் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமியை காண வில்லை என அவரது தாயார் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அளித்த மறுநாள் சிறுமி வீடு திரும்பியதால், புகார் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து சைல்டு லைன் உதவி மையம் நடத்திய விசாரணையில் கடவூர் அருகேயுள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்த ஆண்டி நாயக்கர் மகன்களான மயில்சாமி(26), பழனிசாமி(23) ஆகிய இரு வரும் சிறுமியை கடத்தி சென் றுள்ளனர். மேலும், மயில்சாமி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குளித்தலை போலீஸார் மயில்சாமி, பழனி சாமி ஆகியோர் மீது போக்ஸோ மற்றும் ஆள்கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT