Regional02

கள் கடத்தி வந்த 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரம்பலூர் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனையிட்ட போது, அவர்கள் தடை செய்யப் பட்ட கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் பகடபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் பெரியசாமி(34), தங்க வேல் மகன் ராமராஜ்(30) என்பதும், இவர்கள் பகடபாடி கிராமத்திலிருந்து பெரம்பலூரில் விற்பனை செய்வதற்காக கள் கடத்திக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT