Regional03

உர விலை உயர்வை கண்டித்து ஏப்.15-ம் தேதி ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

விவசாய உரங்களின் விலை உயர்வைக் கண்டித்து, ஏப்.15-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

உர விலையை உற்பத்தி நிறுவனங்களே எந்த கட்டுப்பாடு மின்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவின் தொடர்ச்சியாக, தற்போது 60 சதவீத அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்தி ருப்பது விவசாயிகளை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதன் விளைவாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே, விவசாய உரங்கள், இடுபொருட்களின் விலை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் மத்திய அரசால் நடத்தப்படும் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், உரங்களின் விலை உயர்வை கைவிடக் கோரியும் ஏப்.15-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT