Regional01

முகக் கவசம் வழங்கி வட்டாட்சியர் விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் வட்டாச்சியர் ராம்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகளுக்கு அறிவுரை கூறினர்.

SCROLL FOR NEXT