கோவையில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் முறையீட்டாளர்களுக்கு ரூ.5.68 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கோவை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளரும், முதுநிலை சார்பு நீதிபதியுமான என்.முனிராஜா முன்னிலை வகித் தார்.
இதில், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் தொடர்புடைய வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 264 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டன.
இதன் மூலம் முறையீட்டாளர் களுக்கு தீர்வுத் தொகையாக ரூ.5.68 கோடி பெற்றுத்தரப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.குணசேகரன், எஸ்.பத்மா, பூரண ஜெய ஆனந்த், மலர் வாலண்டினா, ஏ.எஸ்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.
ரூ.51 கோடிக்கு சமரசம்
நீதிபதிகள் எஸ்.கோவிந்த ராஜன், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம்,அவிநாசி உள்ளிட்ட நீதிமன்றங் களில் 15 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
குடும்ப வழக்குகள், காசோலை மோசடி, ஜீவனாம்சம், சொத்து தகராறு உட்பட பல்வேறு பிரச்சினை தொடர்பாக 5,929 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 2,092 வழக்குகளுக்கு ரூ.51 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்துக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.