திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டு கிரி நகரில் 72 வயது, 52 வயது, 48 வயது பெண் மற்றும் 11 வயது சிறுவன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மேற்கண்ட பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, கிருமிநாசினி தெளித்து நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 200 பேருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.