Regional03

பெருமாநல்லூர் அருகே மாணவர்கள் இருவர் : விபத்தில் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அவல்பூந்துறை பூவண்டிவலசு பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் பிரவீன் சங்கர் (25). இவரது நண்பர் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன் (24). இருவரும், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். கோவையில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீராம்பாளையம் மாந்தோட்டம் அருகே சென்றபோது, சாலையில் இருந்த காவல் தடுப்பின் மீது (டிவைடர்) இவர்களது வாகனம் வேகமாக சென்று மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது சடலத்தையும் பெருமாநல்லூர் போலீஸார் மீட்டு, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT