Regional03

திருப்பூர் வடக்கு தொகுதி இ.கம்யூ. வேட்பாளருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ரவி (எ) சுப்பிரமணியம் (64). இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த வாரம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. திருப்பூரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று வந்த அவருக்கு தொற்று உறுதியாகியிருப்பது, அவருடன் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி என்னுடன் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT