Regional02

ஊத்தங்கரை அருகே வாகனத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியகுஞ்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவரது மனைவி நித்யா (30). கடந்த 6-ம் தேதி, நித்யாவுடன், சரவணன் இருசக்கர வாகனத்தில் சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சின்னதள்ளப்பாடி கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி 2 பேரும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த நித்யா சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் நேற்று முன்தினம் நித்யா உயிரிழந்தார். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT