அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் யானைகள் ஆனந்த குளியல் போட்டுச் செல்வதாக வனத்துறையினர் தெரித்தனர்.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையை யொட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில், யானைகள் பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
அப்போது யானைகள் அணையில் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிப்பதுடன் தண்ணீரை ஒன்றன் மீது ஒன்றாக பீச்சி அடிக்கின்றன.
வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் யானைகள் வருகை அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.