விஸ்வநாதன் 
Regional02

சங்கர மடத்தின் கார்யம் இறைவனடி சேர்ந்தார் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் கார்யமாக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்த விஸ்வநாதன் (76)நேற்று இறைவனடி சேர்ந்தார்.

சீர்காழியை பூர்வீகமாக கொண்டவர் வி.விஸ்வநாதன். இவர் தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். சங்கர மடத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த மடத்தில் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர் இந்த மடத்தின் கார்யமாக கடந்த 2013-ம் ஆண்டில் பொறுப்பேற்று தொடர்ந்து சேவை செய்து வந்தார்.

சங்கர மடத்தின் மீதும், மடாதிபதிகள் மீதும் அளவு கடத்த பற்று கொண்டிருந்தார். இவர் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது குடும்பத்தினரும் மடத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT