ராமநாதபுரம் வனவர் ராஜசேகரன் தலைமையில் வனப் பாதுகாப்புப்படை மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ராமநாதபுரம் அருகே காட்டூரணி இசிஆர் சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சாக்குப் பையுடன் வந்த இளைஞரை சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில் 4 முயல்கள் லேசான காயங்களுடன் உயிருடன் இருந்தன. அதையடுத்து, முயல்களை வேட்டையாடிய சமத்துவபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் (28) என்பவரைப் பிடித்து வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.அதன்பின், ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் இளைஞர் ராஜசேகரனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தார்.