Regional03

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் மூர்த்தியான் காலனித் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி குஞ்சு(75). இவரது மகன் வேல்முருகன்(50). டெய்லர். தந்தையின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துத் தருமாறு கடந்த 8-ம் தேதி வேல்முருகன் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த வேல்முருகன் தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாய மடைந்த குஞ்சு, ஜெயங் கொண்டம் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT