Regional01

பெண்ணை தாக்கியவர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் பத்திரகாளி (37). இவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பத்திரகாளியை போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கு, ஆலங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பவர்தான் காரணம் என நினைத்த பத்திரகாளி, அவரிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பத்திரகாளி பலத்த காயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT