Regional01

சுகாதாரத்துறை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது :

செய்திப்பிரிவு

சுகாதாரத் துறை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி, வல்லப விநாயகர் கோயில் அருகே சுகாதாரத் துறை ஊழியரான சுமித்ரா என்பவர், டெங்கு கொசு பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (27) என்பவரது வீட்டுக்குள் சோதனை செய்ய சென்றுள்ளார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்த பிரபாகரன், வீட்டுக்குள் வந்தால் கொலை செய்துவிடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்ததுடன் தரக்குறைவாக திட்டியுள்ளார்.

இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் சுமித்ரா புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT