Regional02

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள - அறைகளை தினமும் கண்காணிக்க அறிவுரை :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி வளாகத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும்,ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலரும், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல்அலுவலர்களும் நாள்தோறும் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய வேண்டுமென, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மூன்றடுக்குபாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளையும், கட்டுப்பாட்டு அறையின் கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார். தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர்.

SCROLL FOR NEXT