திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனிடம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், "கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தமிழகஅரசு விதித்துள்ளது. இதில் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்கு மூட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான், இன்னும் சிலநாட்களில் வர இருக்கிறது. இந்தகட்டுப்பாடுகள் அவர்களை மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த மாதத்தில்தான் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவில்விழித்திருந்து தங்கள் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
எனவே, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கும்பட்சத்தில், அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறி முறைகளின்படி உரியபாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இறை வழிபாடுகளை அமைத்துக்கொண்டு, அரசுக்கு உரியஒத்துழைப்பு அளிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.