Regional02

ரிஷிவந்தியம் அருகே குடிசை தீப்பிடித்து முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ரிஷிவந்தியம் அருகே மின் கசிவால் தீப்பிடித்த குடிசையில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார்.

ரிஷிவந்தியத்தை அடுத்த நாகல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியான் (70). இவர் நேற்று முன்தினம் தனது பேத்தி நிஷா (10) என்பவருடன் உணவருந்தி விட்டு, குடிசையில் உறங்கியுள்ளனர். இந்த நிலையில் திடீரென குடிசை தீப்பற்றி எரிவதை உணர்ந்த சிறுமி கூச்சலிட்டார். தாத்தாவை எழுப்ப முயன்றார். பெரியானால் எழுந்து வெளியேற முடியவில்லை. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் வசிக்கும் தனது தாய், தந்தையரை அழைத்து வந்தார். அப்போது, குடிசை முற்றிலும் எரிந்து, அதில் சிக்கிய பெரியான் உயிரிழந்துள்ளார், தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். பெரியான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மின் கசிவால் குடிசை தீப்பிடித்து சேதமானது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ரிஷிவந்தியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT